விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கமானது இலங்கைக்கு மட்டுமல்ல முழு தெற்காசியாவுக்குமே ஆபத்தானதாகும். கொழும்பில் கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்தது. இன்று 8 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகை மற்றும் இணையத்தள செய்திகளின் அடிப்படையிலேயே புலிகளை தடை செய்துள்ளனர்.
எனவே, இதனை ஏற்க முடியாது. எனவே, பயங்கரவாத பட்டியலிருந்து புலிகள் நீக்கப்பட வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பயங்கரமான சூழ்ச்சி திட்டம் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் என்பது சில்லறைக் கடையல்ல. பலம் பொருந்திய பல நாடுகள் இணைந்த அமைப்பு. அவ்வாறான அமைப்பின் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியமையின் பின்னணியில் இலங்கைக்கு எதிரான சக்திகள் உள்ளன என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரரும் கலந்து கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment