ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மேற்குலக நாட்டு படையினரின் தலைகளை துண்டிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் மேற்குலக நாடுகள் தரை படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என ஐ.எஸ். தீவிரவாதிக் குழுவைச் சேர்ந்த பிரித்தானிய தீவிரவாதியொருவர் வலியுறுத்தியுள்ளார்.
அபு அப்துல்லாஹ் அல் பிரிட்டானி என்ற மேற்படி பிரித்தானிய ஐ.எஸ். தீவிரவாதி பிந்திய வீடியோ காட்சியொன்றில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் முன்னேறி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தரை வழி போரில் ஈடுபடும் ஒவ்வொரு படை வீரரையும் இறைவனின் அனுமதியுடன் தீவிரவாதிகள் கொல்வார்கள் என அல் - பிரிட்டானி (20 வயது) தெரிவித்தார். நாங்கள் அந்தப் படை வீரர்களின் ஆயுதங்களை கைப்பற்றி அவர்களைக் கொல்வோம்.
நீங்கள் ஈராக்கிற்கு வரவோ அல்லது அதனை கைப்பற்ற நினைக்கவோ முடியாது. அதற்கு எந்த வழியும் கிடையாது. நாங்கள் உங்கள் குருதியை இந்த மண்ணில் சிந்த வைப்பதற்கு ஆவலுடன் இருக்கிறோம் எனத் தெரிவித்த அவர் நாம் அமெரிக்கர்களது தலைகளையும் பிரெஞ்சு நாட்டவர்களது தலைகளையும் எமக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் அனைவரது தலைகளையும் துண்டிப்போம் என்று கூறினார். ஈராக் மற்றும் சிரியா பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான பிரித்தானிய படையினர் பயிற்சியாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் செயற்பட்டு வருகின்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடும் பிரித்தானியர்கள் சிலரில் ஒருவராக அல் - பிரிட்டினி கூறுகிறார். இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்த பிரித்தானிய எரித்தீரியரான அவர் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் சிரியா படையினர்களது தலை துண்டிக்கப்பட்ட சடலங்களுடன் தான் தோன்றும் புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மேற்படி புதிய வீடியோ காட்சியில் ஆங்கிலம் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனிய மொழிகளைப் பேசும் தீவிரவாதிகள் காண்பிக்கப்பட்டனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இறைவன் ஆதரவளிப்பதாக உரிமை கோரியுள்ள அல் - பிரிட்டானி நாங்கள் இருப்பதற்கு போராடுபவர்கள் என்பதையும் எமக்காக அல்லாமல் இந்த உலகிற்காக போராடுபவர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மைய வாரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களால் தம்மால் கைப்பற்றப்பட்ட சிரியா நகரான கொபேனை சுற்றியுள்ள பிரதான தளங்களை கைவிட தீவிரவாதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டமை குறித்து அல் - பிரிட்டானி கூறுகையில் மேற்குலக நாடுகளின் குண்டுத் தாக்குதல்கள் தமது திட்டங்களை மாற்றாது எனக் கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment