ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய புகைப்பட ஊடகவியலாளர் ஜான் கான்டில் தோன்றும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ காட்சியில் பிரித்தானிய அரசாங்கம் தனது பிரஜைகளை கைவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐ. எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தரை வழிப்போருக்கான ஆதரவைத்திரட்ட அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுடன் இணைந்து மேற்குலக ஊடகங்கள் மத்தளமடிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜான் கான்டில் (43 வயது) கடந்த இரு வருடங்களாக சிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். அவர் அந்த தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் கீழேயே வீடியோ காட்சியில் உரையாற்றியுள்ளதாக நம்பப்படுகிறது.
ஐ. எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகளை வான் வழித்தாக்குதல்களால் தடுத்து நிறுத்த முடியாது என அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ள நிலையில் அந்தப் தீவிரவாதிகளுக்கு எதிரான தரை வழி தாக்குதல் நடவடிக்கைகளில் அமெரிக்க தரைப்படையினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வலியுறுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ஜான் கான்டில் அமெரிக்காவானது தனது தூதரகம் மற்றும் விமான நிலையத்தை பாதுகாக்க பக்தாத்தில் 1200 படையினரை நிலை நிறுத்தியுள்ளதாகவும் இது தரை வழி தாக்குதலில் படையினரை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக தோன்றுவதாகவும் கூறினார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறுவதற்கான ஆணையில் ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட்டமையின் ஈரம் காய்வதற்கு முன்னரே மூன்றாம் வளைகுடா போருக்கு தூண்டப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment