15வது மாடியிலிருந்த தனது குடியிருப்பின் ஜன்னலால் வெளியே இறங்க முயற்சித்த 5 வயது சிறுமியொருவர் ஜன்னல் கம்பிச் சட்டங்களுக்கிடையே தலை சிக்கிக்கொண்டு தொங்கிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் தென்மேற்கேயுள்ள சொங்கிங் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்திலிருந்தே மேற்படி லிலி என்ற சிறுமி ஜன்னல் சட்டங்களுக்கிடையில் தலை சிக்கிய நிலையில் தொங்கியுள்ளார்.
சம்பவ தினம் லிலியின் பெற்றோர் அவரை வீட்டில் தனியாக வைத்து பூட்டி விட்டு தமது பணிகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்தே அந்த சிறுமி ஜன்னல் சட்ட இடைவெளி மூலம் வெளியேற முயற்சித்து சிக்கிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைய மற்றொரு மீட்புப் பணியாளர் ஜன்னல் சட்டத்தை வளைத்து சிறுமியை மேலே தள்ளியுள்ளார். தொடர்ந்து சிறுமி மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment