விராட் கோலி சதம் அடித்து அபார ஆட்டம்.. இந்தியா 330 ரன்கள் குவிப்பு..!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை பேட்டிங்க செய்ய அழைத்தது. அதன்படி களம் இறங்கிய இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவானும், ரஹானேவும் ஆரம்பம் முதலே அதிரடிக்காட்டினர்.

ரஹானே 68 ரன்களும், தவான் 35 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். அவருக்கு பக்கபலமாக ரெய்னாவும் அதிரடி காட்ட இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 114 பந்துகளில் 127 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ரெய்னா 58 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 331 ரன்கள் என்ற கடின இலக்குடன் அடுத்து களம் காணுகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template