2230 அடி உயர கட்டிடம்: சீனர்களின் பிரம்மாண்டம்...

உலகின் உயரமான கட்டிடத்தை கட்டுவதற்கு சீன நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. இதன் உயரம் சுமார் 2230 அடிகள் இருக்கும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த கட்டிடத்தில் வாழ்வது மேகத்தின் நடுவே வாழ்வது போன்ற அனுபவத்தை தரும் என்பதற்காகவே, இதற்கு ’க்லவ்ட் சிட்டிசன் ப்ரொஜக்ட்’(Cloud Citizen project) என பெயரிட்டுள்ளனர். இந்த ப்ரொஜக்ட்-ஐ அர்பன் ப்யூச்சர் ஆர்கனைஷேசன்(Urban Future Organisation), சி ஆர் டிசைன்(CR-design) மற்றும் சாமெர்ஸ் டெக்னிக்கல் யூனிவர்சிட்டி(Chalmers Technical University) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்க உள்ளன.

இந்த கட்டிடத்தில் சோலார் மூலம் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு போன்ற வசதிகளுடன் உள்ளே ஐ.டி கம்பெனிகள், வணிக வளாகங்கள் மற்றும் கலாச்சார பள்ளிகள் ஆகியவையும் இடம் பெறுமாம். சூப்பர் சிட்டி என பெயரிடப்படவுள்ள இந்த கட்டிடத்தை 2230 அடி உயரத்தில் 1.7 மில்லியன் சதுர அடியில் கட்ட போகின்றனராம்.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெறும். துபாயின் பர்ஜ் காலிஃபா(Burj Khalifa)-வில் உள்ள கட்டிடம் 2717 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்தின் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்தும் எஞ்சினியர்களை வரவழைக்க உள்ளனர். சீனாவின் உள்ள ஷென்ஷன் பே(Shenzhen Bay) என்ற இடத்தில் அமைய உள்ள இந்த கட்டிடத்தை சீனாவின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டால் கூட எவ்வித ஆச்சரியமும் இல்லை.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template