இந்தியாவுக்கு எதிராகத் தான் காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர் என்றும் , அவர்களை தூண்டி விட்டாலே போதும் என்றும், காஷ்மீருக்காக இந்தியாவுடன் போரிடவும் பாகிஸ்தான் தயங்க கூடாது என்றும் பாக்., மாஜி அதிபர் முஷாராப் கூறியுள்ளார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்தியா சார்பில் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதை முற்றிலும் எதிர்பார்க்காத பாகிஸ்தான், உடனடியாக காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா., தலையிட வேண்டும் என ஓலமிட்டது. ஆனால் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஏற்க ஐ.நா., மறுத்து விட்டது. இதனால் பாக்., நாட்டு தலைவர்கள் ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தான் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் தவிர, காஷ்மீரிலும் எங்களுக்கு ஆதாரங்கள் உள்ளன. காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிராக அவர்களை தூண்டி விட்டாலே போதும். காஷ்மீருக்காக இந்தியாவுடன் போரிட பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. நாட்டிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவுடனான போரை விரும்புகின்றனர். பாகிஸ்தான் திருப்பி தாக்காது என்ற மாயையை இந்தியா விலக்கிக்கொள்ள வேண்டும்.
காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களால் தாக்க முடியும். எங்கள் நாடு இஸ்லாமிய நாடு. எங்களது ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட மாட்டோம். நாங்களும் திருப்பி தாக்குவோம். உள்நாட்டில் நாம் வலிமையாக இருந்தால் எந்த ஒரு நாடும் நம்மை தாக்க முற்படாது.
வீட்டு காவலில் முஷாரப் : நீதிபதிகளை கைது செய்தது உள்ளிட்ட தேச விரோத வழக்கில் முஷாரப் கடந்த சில மாதங்களாக லண்டனில் தலைமறைவாக இருந்து நாடு திரும்பியதும் பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சில மாதங்கள் வைக்கப்பட்டார். தற்போது அவர் பாகிஸ்தானில் தங்கி டி.வி., ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment