பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தற்போது அமீர்கான் உடன் ''பிகே'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் தவிர்த்து பாம்பே வெல்வெட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்தப்படியாக சித்தார்த் மல்கோத்ராவுடன் ஜோடி சேர இருக்கிறார். எக்சல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பர்கான் அக்தரும்,ரித்தேஷ் சித்வானியும் தயாரிக்கும் அடுத்த படத்தில் தான் அனுஷ்காவும், சித்தார்த்வும் ஜோடி சேர இருக்கின்றனர்.
அனுஷ்காவும், சித்தார்த்தும் ஏற்கனவே டிவி, விளம்பரங்களில் நடித்துள்ளனர். இப்போது தான் முதன்முறையாக இருவரும் வெள்ளித்திரையில் ஜோடி சேர இருக்கின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment