இரண்டு வாரகாலப்பகுதியில் 545 டெங்கு நோயாளர்கள்

இம்மாதத்தின் இரண்டு வாரகாலப்பகுதியில் 545 டெங்கு நோயாளர்கள் அடையாங்காணப்பட்டுள்ளனர் என தொற்றுநோய் விஞ்ஞானபிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களுல் 79 பேர் கொழும்பு நகரில் வசிப்பவர்கள் என்றும் மட்டக்குளிய, தொட்டலங்க, கோட்டை மற்றும் கருவாத்தோட்டம் ஆகிய பிரதேசங்களிலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

2014 ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 32451 ஆக காணப்பட்டது. அவர்களில் 10709 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

நாட்டில் ஆங்காங்கே மழை பொழிவதனால் வேகமாக டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதான் வீட்டுச்சூழலையும் துப்புறவாக வைத்துக்கொள்ளுமாறும் டெங்கு பரவும் இடங்களை அடையாளங்கண்டு நடவடிக்கை எடுக்குமாறும் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template