ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட புதிய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் சாரதியினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீதே இன்று (14) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.40 மணியளவில் யாழ். அரியாலை மாம்பழம் சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் இத்தாக்குதலினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பஸ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)
.jpg)

.jpg)






Post a Comment