அவருக்காகத்தான் போனோம், ஆனா சிரிப்பே வரல,' என்கிறார்கள் ரசிகர்கள்.
ஹீரோ என்றால் உர்ரென்று முகத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா? படம் முழுக்க காமெடி செய்தபடி வந்தாலும், அவர் ஹீரோதானே... இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, எனக்கும் ஹீரோயின்கள் வேணும், நானும் டூயட் பாடணும், நானும் சண்டை போடணும்... சாகஸங்கள் பண்ணனும் என்று வரிந்து கட்டிக் கொண்டு தன்னை வலிந்து திணிப்பதில்தான் காமெடியன்களின் ஹீரோ சறுக்கல் ஆரம்பமாகிறது.
வடிவேலுவின் தெனாலிராமனை எடுத்துக் கொள்வோம். ஒரு படமாகப் பார்த்தால் அது அப்படியொன்றும் மோசமில்லை. ஆனால் மூன்றாண்டுகள் கழித்து வரும் காமெடிப் புயல் வடிவேலு படமாச்சே.. மனுசன் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கப் போறார்.. என்று நினைத்துக் கொண்டு போனவர்களுக்கு... பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
இப்போது வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். சந்தானம் நாயகனாக வந்துள்ள இந்தப் படமாவது, ரசிகர்களை கொல்லென்று சிரிக்க வைத்ததா என்றால்... ம்ஹூம். சிரிப்பு நடிகரின் சிரிப்பில்லாத படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவை இருக்க வேண்டும்... அவ்வப்போது மானே தேனே பொன்மானே மாதிரி கொஞ்சம் சீரியஸ் காட்சிகளும் வேண்டும். ஆனால் நாயகன் காமெடியன்தான்.
சிரிப்பு நடிகர்களுக்கான திரைக்கதை இப்படி அமைய வேண்டும். அதில் அபார வெற்றி பெற்ற ஒரே ஒருவர் கே பாக்யராஜ். இம்சை அரசன் 23-ம் புலிகேசியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் (உக்கிரபுத்தன் வடிவேலுவைப் பொறுத்துக் கொள்ளலாம்). இதை நாம் சொல்ல காரணம்... வடிவேலு, சந்தானம் படங்களில் உபதேசத்தையும் சாகசத்தையும் யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை. அதற்குத்தான் ஏகப்பட்ட ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்கள் விடும் சவுண்டுதான் அவ்வப்போது காதுகளைப் பதம் பார்க்கிறதே...
ஹீரோவாக வந்தாலும், ரசித்து ரசித்து சிரிக்கும்படியாக காட்சிகள் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், காமெடியன்கள் எவர்கிரீன் ஹீரோக்களாக முடியும்... ம்ம்... யாரு கேக்கப் போறா!
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment