கைதான இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள் இன்று கூறி மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான சேகர் குசைன் வழங்கிய தகவலுக்கு அமைய, மொஹமட் குசையின், மொஹமட் சுலைமான் எனும் இருவர் கடந்த மே மாதம் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள வௌிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றுக்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே இவர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அந்த நாடு மலேஷியாவிடம் கோரிக்கைவிடுத்ததது. எனினும் அதனை மலேஷியா நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this movie :

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template