மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
கடந்த 2002-ல் ஜெ., ஆட்சி காலத்தின் போது திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது பொடா வழக்கு தமிழக அரசு சார்பில் போடப்பட்டது. கியூ பிரிவு போலீஸார் பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்தனர். ஆனால், வைகோ மீதான பொடா குற்றச்சாட்டில் முகாந்திரம் ஏதும் இல்லை என மத்திய சீராய்வு கமிட்டி 2004ல் தீர்ப்பளித்தது. சீராய்வு கமிட்டியின் தீர்ப்பை அடுத்து பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது. வழக்கை வாபஸ் பெறும் தமிழக அரசின் முடிவை பொடா நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
பொடா நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது. இதையடுத்து வைகோ உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று வைகோவின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வைகோ உள்ளிட்ட 7 பேர் மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment