மும்பை நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராய் லட்சுமி

தமிழில் ‘கற்க கசடற’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராய். இப்படத்தை தொடர்ந்து ‘குண்டக்க மண்டக்க’, ‘தருமபுரி’, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல

படங்களில் நடித்தாலும் இதுவரை பெயர் சொல்லும் படி ஒரு நல்லப்படம் கூட அமையாததால் தன் பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘அரண்மனை’, ‘இரும்பு குதிரை’ படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராய் லட்சுமி தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து மலையாளத்தில் ‘ராஜாதி ராஜா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மும்பையை சேர்ந்த ஏ.எஸ்.ஏ நிறுவனம், தமிழில் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க ராய் லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template