ஜனாதிபதி மஹிந்த ராஜபக் வின் ஆட்சியின் கீழ் தனி ஈழக் கோரிக் கையை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வதேச நாடுகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. எனவே, அடுத்த ஜனா திபதித் தேர்தலை இதற்கான பகடைக் காயாகப் பயன்படுத்தி இலங் கைக்குள்ளும் அரபு
வசந்தத்தை ஏற்படுத்தும் சதி முயற்சியில் சர்வதேச நாடுகள் தற் போது இறங்கியுள்ளன”
இவ்வாறு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் நேற்று தெரிவித்தது.
மேலும், அடுத்த வருட ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ள அஹிம்சை வழிப்போராட் டம் கூட இதற்கான ஒரு முன்னோட்ட மாக இருக்கலாம் என்றும் அவ்வ மைப்பு எச்சரிக்கை விடுத்தது.
கொழும்பில் அமைந்துள்ள செள சிரிபாயவில் நேற்று முற்பகல் நடை பெற்ற செய்தியாளர் மாநாட் டின் போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாள ரான வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில்,
நாட்டில் தற்போது பெரும் சர்ச்சை யாக மாற்றமடைந்துள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்தே அனைத்துக் கட்சிக ளும் விமர்சித்து வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் மூன்றாவது தடவையாகவும் வேட்பாளராகக் களமிறங்க முடியுமா? இதற்கு தற்போதுள்ள அரசமைப்பில் இடமிருக்கின்றதா? என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான சந்தேகமாகவும் விமர்சனமாகவும் காணப்படுகின்றன.
ஆனால், சர்வதேசத்தின் பார்வையில் இந்த ஜனாதிபதித் தேர்தலானது நாட்டினுள் பிரிவினைக்கு வழிவகுக்கக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
13 ஆவது திருத்தம் இல்லாதொழிந்து நாட்டிலுள்ள மாகாணசபை முறைமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒருசாராரின் கருத்தாக காணப்படுகின்றது.
இந்த மாகாண சபை முறைமை மூலம் நாட்டில் தேவையில்லாத பிரிவினைகள் வளர்வதாலும், அது நமது நாட்டிற்கு அவசியமற்ற ஒன்றாக இருப்பதாலும் நாமும் இந்த முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்றே கருதுகின்றோம்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, தாம் ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறினால், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என சூளுரைத்துள்ளார்.
இவரின் இக்கருத்தானது எதிர்காலத்தில் பிரிவினைவாதத்திற்கு வித்திடக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் ஆட்சியின் கீழ் தனி ஈழத்தை ஏற்படுத்த முடியாது என நன்கு அறிந்து வைத்துள்ள சர்வதேச சக்திகள், இதனை இலங்கையில் அடுத்த ஆட்சியிலாவது நடைமுறைப்படுத்தி விடவேண்டும் என்ற முனைப்புடன் தற்போது காணப்படுகின்றன. இதற்காக, சர்வதேசம் குறிவைத்துள்ள அடுத்த கட்ட இலக்கே இந்த ஜனாதிபதித் தேர்தல்.
இதில் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைத்து தமிழீழத்தை ஏற்படுத்தவே சர்வதேசம் இலங்கைக்கு இத்தனை அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
அடுத்த வருட ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அஹிம்சை வழிப்போராட்டம் கூட சர்வதேசத்தின் அரபு வசந்தத் திட்டத்தின் அத்திபாரமாக அமையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
ஆகவே, மக்கள் இதுகுறித்து அவதானமாக செயற்பட வேண்டும். ஜனாதிபதியாக நிறுத்தப்படும் வேட்பாளரிடம் மக்கள் தமது கோரிக்கைகளைத் தயங்காது முன்வைக்க வேண்டும். இப்படி நடந்தால் மாத்திரமே சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம்” என்றார்.
அதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இத்தேர்தலில் வெல்வது சற்றுக் கடினமான ஒன்றே என்றும் வசந்த பண்டார இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
“”2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் 50 வீதத்திற்கும் அதிகமாக, மஹிந்த ராஜபக்வினால் சுமார் 28 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
அதுவும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையில், பல காத்திரமான பிரசாரங்களை மேற்கொண்டே இந்த வெற்றியை அவர் பெற்றுக் கொண்டார்.
ஆனால், இப்போது அந்நிலை முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. மக்களைத் தற்போது வதைக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து ஒரு தீர்க்கமான‡ உண்மையான செய்தி ஒன்றை அவர் மக்களுக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே இத்தேர்தலில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெல்ல முடியும்.
இதைவிடுத்து வெறும் அபிவிருத்திகளை மட்டுமே செய்துகொண்டு மக்கள் மத்தியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் போல கை அசைத்துப் பேசினால் ஒன்றும் நடக்காது” ‡என குறிப்பிட்டார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment