இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா நேற்று தெரிவித்தார்.
“”வடக்கில் உள்ள தமிழ் மக்களை மேலும் அடக்குமுறைக்குள்ளும், ஒடுக்கு முறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்குடன் அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறையை நாம் வன் மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடவுள்ளோம். அத்து டன், இதனை நாடாளுமன்றிலும் எடுத்துரைக்கவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணத்துக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்ற நடைமுறை இனிமேல் வடக்கின் உண்மை நிலையை அறிய அங்கு செல்லும் சர்வதேச முக்கியஸ்தர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தடையாக அமையும். இதனைத் திட்டமிட்டே அரசு இந்த நடைமுறையை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டவர்கள் இனிமேல் வடக்குக்குச் செல்லவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
வடக்குக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் சிலர் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று மாவை எம்.பியிடம் நேற்று “சுடர் ஒளி’ வினவியபோதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“”பாதுகாப்பு அமைச்சின் திட்டமிட்ட இந்த நடைமுறையால் வெளிநாட்டில் வசிப்போர், வடக்கில் உள்ள தமது உறவுகளை வந்து பார்வையிடுவதற்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. அவர்கள் துன்ப நிகழ்வுகளிலோ அல்லது மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளிலோ பங்கேற்க வருவதற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டவர்கள் இனிமேல் வடக்குக்குச் செல்லவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறையை உடனடியாக வாபஸ் பெறுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment