வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் அடுத்தமாதம் ஆரம்பம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்றில் அதிகூடிய முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாக நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.

இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் 1 1/4 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அடுத்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் நெடுஞ்சாலையை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும்.

பல வருட திட்டத்தின் பின்னர் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையே நிர்மாணிக்கப்பட இருந்தது. ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிற்கும் நெடுஞ்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி வெளிச் சுற்றுவட்ட வீதியில் எடேரமுல்லையில் இருந்து - தம்புள்ள வரை முதற் கட்டத்தின் கீழ் நெடுஞ் சாலை நிர்மாணிக்கப்படும். பொது ஹரையில் இருந்து ரம்புக்கன, கலகெதர. ஊடாக கன்னொருவ வரை கண்டி வரையான நெடுஞ்சாலை அமைக் கப்படும். மொத்தமாக 154 கிலோ மீற்றர் தூர நெடுஞ்சாலை உருவாக்கப்பட உள்ளதோடு காணி சுவீகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

தேர்தல் நோக்கத்தில் இந்தக் காலத்தில் நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப் படவில்லை இது ஏற்கனவே திட்டமிடப் பட்டதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template