மகிந்த மோட்டசயிக்கில் கொடுத்தா நாங்க கோழிக்குஞ்சு குடுப்ப முள்ள,,,,,,,,,,,

வடக்கு மாகாணசபையின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 100 பயணாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதற்கான நிகழ்வுகள் தொண்டமனாறு சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர்ப்பாசன திணைக்கள வளாகத்தில் இன்று மாலை  நடைபெற்றது. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடபகுதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று  தொண்டமனாற்றில் கால்நடை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

வருமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 100 பேருக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது. மேலும் இவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கால்நடை அமைச்சர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வரப்போகுதென்றால்  எல்லாம் வரும்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template