சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இரவு 07.00 மணியளவில், அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அரசாங்கத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் நேற்று ஜனாதிபதி சந்தித்து விஷேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template