சிறையில் நலமாக உள்ளார் ஜெயலலிதா,யாரும் கவலைப்பட தேவை இல்லை: ஜெயசிம்மா

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருக்கிறார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விஷயங்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா அங்கேயே இருந்து தீவிரமாக கவனித்து வருகிறார்.


ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பத்திரிகையாளர்களுக்கு இவர் தான் அடிக்கடி தகவல் தெரிவித்து வருகிறார்.


இந்த நிலையில் டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுடன் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் உள்ளனர். ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. தினமும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை சோதனை செய்து வருகிறது. அவரது உடல் ஆரோக்கியத்தை நாங்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவருக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.


ஜெயலலிதா தினமும் காலையில் எழுந்ததும் நடைபயிற்சி மேற்கொள்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளை படிக்கிறார். அதன் பிறகு காலை சிற்றுண்டியாக ஒரு ’கப்’ பால், ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு பிரட்டு எடுத்துக் கொள்கிறார். மதியம் தயிர் சாதமும், இரவில் பால் மற்றும் பழங்கள் மட்டுமே உட்கொள்கிறார். அவருக்கு உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அவர் விரும்பும் உணவு வழங்கப்படுகிறது.


இன்று காலையில் மட்டும் அவர் நடைபயிற்சி மேற்கொள்ளவில்லை. வக்கீல்கள் வந்து ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். நேற்று அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் சற்று சோர்வாக காணப்பட்டார். நான் ஒரு நாளைக்கு 3 முறை அவரை சந்தித்து பேசுகிறேன்.


உடல்நிலை உள்பட ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என்று கேட்கிறேன். அவர் எந்த புகாரையும் தெரிவிப்பது இல்லை. சிறையில் அவர் நலமாக உள்ளார். அவரது உடல் நிலையை பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை’’என்று கூறினார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template