பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் உள்ளன. இவற்றில் லஷ்கர் இ தொய்பா போன்ற இயக்கங்கள், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கின்றன. இந்த பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைகின்றனர். இவர்கள் ஊடுருவ வசதியாக, பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
தொடர் தாக்குதல்:
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 6ம் தேதி அர்னியா என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில், 5 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 35 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று இரவு, சர்வதேச எல்லை பகுதியில் பாக்., நடத்திய தாக்குதலில் ஒரு மூதாட்டி பலியானார். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். மூன்று எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் காயம் அடைந்தனர்.
700 பயங்கரவாதிகள்:
இந்திய எல்லையை ஒட்டி உள்ள பாகிஸ்தான் பகுதியில் 700 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுரு காத்திருப்பதாக, ராணுவ உளவுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், எல்லையோர பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வௌியேற துவங்கி உள்ளனர்.
பேச்சுக்கு இந்தியா மறுப்பு:
தாக்குதலை நிறுத்துமாறு இந்திய தரப்பில் இருந்து பாக்., ராணுவத்திற்கு பல முறை எச்சரிக்கப்பட்டது. ஆனால், பாக்., தாக்குதலை நிறுத்தாமல், அப்பாவி பொதுமக்கள மீது துப்பாக்கி சூடு நடத்தியது. எனவே, திருப்பித் தாக்க இந்திய ராணுவத்திற்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இதையடுத்து பாக்., நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தியாவின் தாக்குதல் பலமாக இருந்ததால், கொடி அமர்வு பேச்சுவார்த்தைக்கு பாக்., ராணுவ அதிகாரிகள் அழைத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது.
பாக்கின் தகிடுதத்தம்:
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா அத்துமீறி பாகிஸ்தான் பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். இந்திய ராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பாக்., ராணுவ அதிகாரிகள், இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதற்கு இந்திய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment