ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பொதுமக்கள் வாழும் இடங்களிலும், பாதுகாப்பு படையினரின் நிலைகள் மீதும் பாகிஸ்தான் படை தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இவ்வாறு தாக்குதல் நடத்தி வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்க நமது படையினருக்கு அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து, பாகிஸ்தானின் 73 நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த சில தினங்களில் மட்டும் எல்லையோரம் வசித்த சுமார் 20000 மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் தொடர்ந்து வரும் பாகிஸ்தான் படைகளின் அத்துமீறல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை அறிய இன்று செய்தியாளார்கள் முயன்றனர்.
அவர்களுக்கு பதிலளித்த மோடி, ’விரைவில் அனைத்தும் சரியாகி விடும்’ என்று மட்டும் தெரிவித்தார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment