மகிந்தவை தான் யாழில் வைத்து சந்திக்கப் போவதில்லை ,விக்னேஸ்வரனின் அதிரடி முடிவு

இலங்கை ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 பதவி ஏற்கும் போது மகிந்த முன்னிலையில் பதவியேற்ற விக்னேஸ்வரன் யாழ் வரும்   மகிந்தவை புறக்கணிக்க எடுத்த காரணம் அவர் வடமாகாண சபையில் எடுத்த முடிவுகளை மகிந்த புறக்கணித்தமை காரணமாக இருக்கலாம்.


இலங்கை ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையுடன் ஒத்துழைக்காத காரணத்தினாலும், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்றுள்ள, வடமாகாணசபையின் அனுமதி பெறாமல் அத்துமீறி காணிகள் கைப்பற்றப்பட்டிருப்பது உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவும் எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள வடமாகாண வளர்ச்சிப் பணிகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்திலும், வடமாகாணத்திற்கு விஜயம் செய்கின்ற ஜனாதிபதி கலந்து கொள்கின்ற வைபவங்கள் எதிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள நீண்ட கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகளைக் கருத்திற் கொண்டு, இது தொடர்பில் தமது அமைச்சரவையுடனும், சபை முதல்வருடனும் கலந்தாலோசித்ததன் பின்னர் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template