குத்துப்பாட்டு நடிகைகளாக மாறும் பாலிவுட் ஹீரோயின்கள்...!

முன்பெல்லாம் சினிமாவில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு என்றே சில கவர்ச்சி நடிகைகள் இருந்து வந்தார்கள். இப்போதும் அதுபோன்று சில நடிகைகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு போதிய மவுசு தான் இல்லை. காரணம், சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களே குத்துப்பாட்டுக்கு ஆட ஆரம்பித்துவிட்டனர். 

இதற்கு முக்கிய காரணம் ஒரே ஒரு பாட்டில் கோடிகளில் சம்பளம் பெற்று விடலாம் என்ற எண்ணம் தான். 20 நாட்கள், 30 நாட்கள் என்று கால்ஷீட் கொடுத்து, நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஓரிருநாளில் ஒரு பாட்டில் ஆடி அந்த சம்பளத்தை பெற்றுவிடுகின்றனர். இந்தி திரையுலகில் ஆரம்பித்த இந்த கலாச்சாரம் இப்போது பரவலாக அனைத்து சினிபீல்டிலும் பரவ தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் பாலிவுட் ஹீரோயின்கள் தான் டாப்பில் இருக்கின்றனர். அவர்கள் யார் யார்.? என்பதை பற்றி இனி பார்ப்போம்....


கரீனா கபூர்


பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரும் ஜோடி போட்டு நடித்தவர் கரீனா கபூர். நடிகை சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இப்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரும் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். குறிப்பாக தபாங்-2வில் இவர் ஆடிய சிப்கலே சயான் பெவிகால் செ..., ரா-ஒன்-ல் தும் மெரி சமக் செலோ..., ஹீரோயின்-ல் ஏ கல்கத் ஜவானி போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.


கத்ரீனா கைப்


பார்பி டால் என்று அழைக்கப்படும் பாலிவுட்டின் செக்ஸி நடிகை கத்ரீனா கைப்பும், நிறைய குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். தீஸ் மார் கான் படத்தில் அவர் ஆடிய ஷீலா கி ஜவானி பாடல் மற்றும் அக்னீபத் படத்தில் அவர் ஆடிய சிக்கனி சாமெலி... பாடல்கள் ரொம்ப பிரபலம்.


தீபிகா படுகோனே


பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நடிகைகளில் தீபிகா படுகோனேவும் ஒருவர். முன்னணி நடிகையாக இருக்கும் இவரும் ஏராளமான குத்துப்பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். 2011ம் ஆண்டு வெளிவந்த தம் மாரோ தம் படத்தில் இவர் ஆடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இந்தப்பாட்டில் தீபிகாவின் கவர்ச்சியான உடையும், அவர் உடம்பில் குத்தியிருந்த டாட்டூவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


ப்ரியங்கா சோப்ரா


மேரி கோம் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். ''ராம் லீலா'' படத்தில் இவர் ஆடிய 'ராம் ஜாகி லீலா...' பாடல், ஜாஞ்சீர் படத்தில் இவர் ஆடிய பிங்கி ஹாய் பைசா... போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


வித்யாபாலன்


பாலிவுட்டின் பன்முக தன்மை கொண்ட திறமையான நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்த வித்யாபாலனுக்கும் குத்துப்பாட்டின் மீதிருந்த மோகம் தீரவில்லை, அதனாலும் அவரும் குத்துப்பாட்டில் ஆட ஆரம்பித்துவிட்டார். பெராரி கி சவாரி படத்தில் அவர் ஆடிய மாலா ஜவு தே... என்ற குத்துப்பாடல் ரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


பிபாஷா பாசு


பாலிவுட்டின் ஹாட் நடிகையான பிப்ஸ் எனும் பிபாஷா பாசுவும் ஓம்காரா, ஜோடி பிரேக்கர்ஸ் உள்ளிட்ட படங்களில், குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். இவர் ஆடிய நமாக் இஷ்க் மற்றும் பிட்டி ஜல்அயிலே... பாடல்கள் மிகப்பிரபலம். இந்த இரண்டுபாடல்களிலும் மிகவும் கவர்ச்சியாக ஆடி ரசிகர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தவர்.


சித்ரங்கடா சிங்


பாலிவுட்டின் தற்போதைய நடிகைகளில் பன்முக திறமை கொண்ட இளம் நடிகை சித்ரங்கடா சிங். இவரும் ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். இருந்தாலும் ஜோக்கர் படத்தில் இவர் ஆடிய குத்துப்பாட்டுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template