ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைமையகத்துக்கு சென்றுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்து புனித அல் குர்ஆன் பிரதி, அதன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை பெற்றுச் சென்றுள்ளனர். விசாரணையொன்றின் நிமித்தமே இவ்வாறு குர் ஆன் பிரதிகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பெற்றுச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்திற்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவர் குர் ஆன் பிரதி ஒன்றையும் அதன் மொழிப்பெயர்ப்பு பிரதியொன்றையும் வழங்குமாறு உலமா சபையிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து உலமா சபையினர் குரான் பிரதி, மொழிபெயர்ப்பு பிரதி ஆகியவற்றை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு கையளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அரசியல் தலைமைகளாலும் சமூக மட்டதில் செயற்படுவோராலும் பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அடிப்படைவாதிகளின் தேவைகளுக்காகவே பயங்கரவாத விசாரணைப் பிரிவு குர் ஆன் மற்றும் அதன் மொழிப்பெயர்ப்பு பிரதிகளை கோருகிறது என்ற சந்தேகம் பரவலடிந்து வரும் நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் குர் ஆன் பிரதிகள் ஏன் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் கேசரி பொலிஸ் பேச்சாளரை கேட்டது.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன கேசரிக்கு இவ்வாறு பதிலளித்தார். ‘ ஜம் இய்யதுல் உலமா சபை குர் ஆனில் உள்ள விடயங்களுக்கு மாற்றமாக உள்ளூரில் செயற்பட்டு வருவதாக தெளஹீத் ஜமா அத் என்ற அமிப்பினரால் குற்றச் சாட்டு முன் வைக்கப்ப்ட்டுள்ளது.
ஜம் ஈய்யதுல் உலமா சபிக்கும் தெளஹீத் ஜமா அத்துக்கும் இடையிலான இந்த முறுகல் நிலைமை பாரதூரமாக மாறி பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் பொலிஸார் அவதானமாக உள்ளனர். குர் ஆனில் இல்லாத விடயங்களை உலமா சபை செயற்படுத்துவதாக் தெளஹீத் ஜமா அத்தின் குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் தேவைக்காகவே உலமா சபியிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் கோரிக்கை விடுத்து குர் ஆன் பிரதிகளை பெற்றுள்ளனர். மாற்றமாக வேறு எந்த காரணங்களும் இதன் பின்னணியில் இல்லை. அத்துடன் வேறு நோக்கங்களும் இல்லை. பலாத்காரமாக குர் ஆன் பிரதிகள் பெற்றுக்கொள்ளப்படவுமில்லை.’ என குறிப்பிட்டார்.
பொலிஸார் குர் ஆன் பிரதிகளை பெற்றுச் சென்றதை உறுதி செய்த ஜம் இய்யதுல் உலமா சபை பொலிஸார் பலாத்காரமாகவோ, தம்மை அவமரியாதை செய்யும் வகையிலோ எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை எனவும் அனைத்தும் முறையாகவே இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment