ஆக்ஷன் ஹீரோயின் ஆனார் சுவாசிகா

கோரிப்பாளையம், வைகை, சாட்டை படங்களில் நடித்திருப்பவர் சுவாசிகா. இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்ப பாங்கான கேரக்டர்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக சாட்டை படத்தில் தன் தந்தை வயதை உடைய சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தார்.

இப்போது அவர் பிரபா என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினியாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் பேமிலி படங்களில் நடித்தேன். அதனால் சுவாசிகா பாவாடை தாவணி, சேலை கேரக்டர்களுக்குத்தான் பொருத்தமானவளாக இருப்பாள் என்று முடிவு கட்டிவிட்டார்கள். ஒரே மாதிரியான கேரக்டர்களாகவே வந்தது. 

சில படங்களை வேண்டாம் என்று கூட சொல்லிவிட்டேன். என்னால் கிளாமராகவும் நடிக்க முடிவும். அதை நிரூபிப்பதற்கான படங்கள் அமையவில்லை. மலையாளத்தில் நான் நடித்த படங்களை பார்த்தால் புரியும். சுரேஷ்கோபியுடன் நான் நடித்த மாலூட்டி சாபு என்ற படம் ரிலீசாக இருக்கிறது. அதில் கிளாமராக நடித்துள்ளேன். மேலும் மூன்று மலையாள படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் ரணம், அப்புச்சி கிராமம், பண்டுவம் படங்களில் நடித்து வருகிறேன். பண்டுவம் இந்த வாரம் ரிலீசாகிறது.

அடுத்து பிரபா படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறேன். இதற்காக சண்டை இயக்குனர் விஜய்யிடம் முறைப்படி சண்டை பயிற்சி பெற்று நடித்தேன். ஹீரோக்களுக்கு நிகராக சண்டைபோட்டு நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் சிறு சிறு விபத்துக்களை சந்தித்தேன். பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. என்கிறார் சுவாசிகா.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template