பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஆயிரம் பேருக்கு மோட்டார் சைக்கிள்கள்!

பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான உறவை மேலும் மேம்படுத்தவும் அவர்களின் சேவைகளை துரிதப்படுத்தும் முகமாக பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் ஆயிரம் பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பம்பலபிட்டியிலுள்ள பொலீஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். நாடுமுழுவதிலுமுள்ள 438 பொலீஸ் நிலையங்களுக்கு இதன்போது மோட்டார் சைக்கிளகள் வழங்கப்பட்டன.

பொலீஸ் மாஅதிபர் என்.கே.இளங்கக்கோன், சிரேஷ்ட பிரதி பொலீஸ் மா அதிபர் காமினி நவரத்ன உட்பட உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template