தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தின் முன் தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலை, சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் வைப்பது போல மாதாந்திர மீனவர்கள் குறைதீர் கூட்டத்தினை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template