யாழில் குழு மோதலில் ஈடுபட்ட ஐவர் கைது

யாழ். துன்னாலை வேம்பங் கேணி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஐவரை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் வீதியில் சென்ற சிறுவன் ஒருவனை தலையில் அடித்தமை தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை சண்டை இடம்பெற்றது.

இதனையடுத்து, அங்கு சென்ற காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.நந்தன ரணவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர், இரு குழுக்களையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இருந்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை(05) தொடர்ந்தும் குழுச்சண்டையில் ஈடுபட்டமையால் குழுச்சண்டையுடன் தொடர்புடைய ஐவரை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.


இதேவேளை நேற்று மாலை 6 மணி யில் இருந்து இரவு 7.00 மணி வரையான சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் 8 பேர் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் குழு மோதல் மற்றும் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்; என போதனா  வைத்தியசாலைப் பதிவுகள் உறுதிப்படுத்தின.

 குறிப்பாக யாழ்.குருநகர், கொழும் புத்துறைப் பகுதியில் இடம்பெற்ற  குழு மோதல்களிலேயே அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.       
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template