அமரிக்காவினால் கட்டுப்படுத்த முடியாத எபோலாவை இலங்கை கடுப்படுத்த தயார்

உலக சுகாதார அமையத்தின் பரிந்துரைக்கு அமைய இபொலோ நோய் தொடர்பில் செயற்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இபொலோ வைரஸ் இலங்கைக்குள் நுழைய உள்ள ஆபத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹீபால அத தெரணவிடம் தெரிவித்தார்.

தொழிநுட்ப வசதி, சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சாதாரண காய்ச்சல் காணப்படும் நபராக இருந்தாலும் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிகவடன தெரிவித்தார்.

மேலும் இபொலோ வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படும் 5 நாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களின் விசா நடைமுறை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நைஜீரியா, லைபீரியா, சியராலியோன், கினியா மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்கள் தொடர்பில் இந்த விசேட நடைமுறை கடைபிடிக்கப்படுவதாக பிரதி குடிவரவு கட்டுப்பாட்டாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அவர்களது நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் உறுதி மருத்துவச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த உறுதிச் சான்று வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் குடிவரவு திணைக்களம் ஆகியவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே குறித்த நபருக்கு இலங்கை செல்ல விசா வழங்கப்படும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template