வடக்கு மாகாணத்தில் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வட மாகாண சபையினரும் அரசுக்கு அனுமதி தரவில்லை. அவர்களும் அவற்றை செய்கிறார்கள் இல்லை. வட மாகாண சபை வைக்கோல் பட்டடை நாய் போல செயற்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கின்றது.
இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் கூட்டமைப்பின் பதில் என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோது அவர் தெரிவித்தவை வருமாறு:- “வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டபடி விமர்சித்துள்ளார். இதற்கான பதிலை முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வடக்கு மாகாண சபையினரும் வழங்குவார்கள்.
எனினும், வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருப்பதனால் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அதற்கான பதிலை உரிய நேரத்தில் வழங்குவேன். ஜனாதிபதிக்கான இந்தப் பதிலை நாடாளுமன்றில் வைத்துத் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளேன்” – என்றார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment