மீண்டும் ஆயுதம் ஏந்த மாட்டோம் ,சிறிதரன்

நாங்கள் இலங்கையை பிரிக்க கோரவில்லை, ஆயுதம் தூக்கி போராட சொல்லவில்லை ஆனால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தேவை என்றே கோருகின்றோம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கிராம மட்டத்தில் எடுத்து செல்லல் எனும் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட கிளையின் மாநாடு இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தமிழர்களை பலவீனப்படுத்த முயல்கின்றது, அதற்கு தாடிவைச்ச சாத்தானும் அதனுடன் உள்ள குட்டி சாத்தான்களும் துணை போகின்றன என, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இன்றைய இந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template