இலங்கையின் குற்றம் தொடர்பாக நாம் ஒன்றும் செய்ய முடியாது, அது எமது வேலையில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவின் தலைவர் சேர் நிஜல் ரொட்லி தெரிவித்துள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பில் இலங்கையை மதிப்பீடு செய்வதே எங்கள் முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடினமான மோதல் நடந்தது என்பதை குழு புரிந்து கொள்கிறது. ஆனால், அங்கு தொடரும் தண்டனையில் இருந்து தப்பித்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கரிசனைகள் தொடர்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களை நம்பி இலங்கைத் தமிழர்கள் இனியும் இருக்கமாட்டார்கள் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியாது போல, போர் நடைபெற்ற போது பான் கி முன் இலங்கை சென்று என்னத்தை கிழித்தார்? என்ன தான் மனித உரிமை பற்றி கதைத்தாலும் போரை தூண்டி விட்டு உயிர்களைக் கொல்வதும் இவர்கள் தான் ,
உதாரணம் சிரியாவின் போர், , மக்களை வாட்டி வதைத்த அரசாங்கத்தினை உள்நாட்டுப் போர் என்று சொன்னார்கள் , ஆனால் தற்போது அமரிக்கா , பிரிட்டன் , பிரான்ஸ் என ஒவ்வொரு நாடுகளும் அங்கு தாக்குதல் செய்கின்றன , ஐக்கிய நாடுகள் சபை நினைத்தால் இந்தப் போரை எப்பவோ நிறுத்தியிருக்கலாம்,
இனியும் ஐக்கிய நாடுகள் சபையை நாம் நம்புவதை விட்டு எமது வேலைகளை நாமே செய்யலாம்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment