யாழ் இளைஞன் நுவரெலியாவில் நீரில் முழ்கிப் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று திரும்பும் போது இறம்பொடை ஒயாவில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (06) காலை 10.50 மணியளவில் ஆற்றில் தவறி விழுந்து மயக்கமுற்ற இளைஞன் கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



இவர் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு இலக்கம் 24 சபாபதி வீதியைச் சேர்ந்த என்.விமலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரசாயன ஆய்வு கூட பரிசோதகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template