ஜெயலலிதாவின் பிணை மனுமீது இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா ஜெயராமன் தாக்கல் செய்துள்ள பிணை மனு, இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதாவிற்கு பிணை கிடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் பலரும் அங்கப்பிரதட்சணம், தீ மிதித்தல் என பல பிரார்த்தனைகளை செய்து இறைவனை வேண்டி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் தண்டனை பெற்றுள்ள அ.தி.முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, செப்டெம்பர் 27ஆம் திகதி பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜெயலலிதா உட்பட 4 பேர் பிணை கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று நண்பகல் 12 மணிக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வருகிறது. அதனுடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகி வாதாடுகின்றனர்.

சிறையில் 10 நாட்களாக சிறையில் உள்ள ஜெயலலிதாவை நாள்தோறும் அவரைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் வந்த வண்ணம் இருக்கின்றனர்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template