ஸ்ருதிஹாசனை வைத்து விளம்பரம் தேடிய பூஜை..!

ஹரி இயக்கத்தில், விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளி ரிலீசாக நாளை வெளியாக உள்ள படம் ’பூஜை’. கத்திக்கு போட்டியாக இப்படம் களம் இறங்குகிறது. விஷால் நடித்த படங்களிலேயே அதிக தியேட்டர்களில் ரிலீஸாவது பூஜை படம்தான்.

கிட்டத்தட்ட 1108 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறதாம். இதில் தமிழகத்தில் 375 தியேட்டர்கள், ஆந்திராவில் 473 தியேட்டர்கள், கேரளாவில் 70 தியேட்டர்கள், எப்.எம்.எஸ் 143, கர்நாடகாவில் 47 தியேட்டர்களில் பூஜை ரிலீஸ் ஆக உள்ளது. ஆந்திராவில் தமிழகத்தைவிட அதிக தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளதுதான் இதில் விஷயமே.

பூஜையுடன் கத்தி படமும் களத்தில் குதிப்பதால், தமிழகத்தில் வசூல் குறைந்தாலும், ஆந்திரா பக்கம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம் படக்குழுவிற்கு. ஆந்திராவில் அதிக தியேட்டர்களில் பூஜை ரிலீசாக காரணம், அதன் ஹீரோயின் ஸ்ருதிஹாசன்தான்.

தமிழிலில் அம்மணி நடித்த படங்கள் கைகொடுக்காவிட்டாலும், ஆந்திராவில் ராசிக்கார பெண் அவர். ஒரு பாடலில் நடனமாடினாலும் படம் ஹிட் ஆகிவிடுகிறதாம். எனவே பூஜை படத்தை ஸ்ருதிஹாசன் நடித்த படம் என்றுதான் அங்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.

விஜயசாந்தி, ரோஜா போன்றே ஸ்ருதிஹாசனும் அங்கு ஹீரோயினை மையப்படுத்தும் படங்களுக்கான முகவரியாக மாறிப்போயுள்ளார். இதுதான் ஆந்திராவில் பூஜை களை கட்ட காரணம்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template