கொடிகாமம் பஸ்ஸில் பயணித்த 44 வயதுடைய பெண்ணின் கைப்பையில் இருந்த 14,000 ருபா பணத்தினை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், மூன்று இளம்யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு - ஆமர் வீதி மற்றும் மானிப்பாய் வீதி, கொடிகாமத்தினைச் சேர்ந்த 22, 23, 24 வயது யுவதிகளே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், நேற்று சனிக்கிழமை (18) யாழ்ப்பாணத்தில் இருந்து மீசாலைக்குச் சென்றுள்ளார். பயணத்தின் போது அருகில் நின்ற மூன்று யுவதிகள் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.
பஸ்ஸில் இருந்து இறங்கிய பின்னர் கைப்பையில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டதை அறிந்த அப் பெண், ஊடனடியாக முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி கொடிகாமம் பஸ்ஸினை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர் பஸ்ஸினை மறித்து மூன்று பெண்களையும் விசாரணை செய்ததுடன், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதன் பிரகாரம் மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அவர்களை ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment