ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது செய்த தவறை அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது செய்யாது என்று தான் நம்புவதாக தேசிய வீடமைப்பு மற்றும் பொறியியல் நிர்மாண அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது எமது கட்சி ஆதரவளித்தது போல யுத்த வெற்றி மற்றும் அபிவிருத்திக்காக் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத எதிர்ப்பு தடைகளை அண்மையில் இரத்து செய்தது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய விஜயத்தின் வெளிப்பாடே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று சில இரகசிய விடயங்களை செய்வது வழக்கம்.
ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல மலேசியாவுக்கும் சென்று அந்த நாட்டில் இயங்கும் விடுதலைப்புலிகளை சந்திக்க இருந்துள்ளார் என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது.
அது மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்தால் வடக்கில் ஒர் ஆட்சியும் தெற்கில் ஒர் ஆட்;சியும் இல்லாமல் முழு இலங்கையிலும் 13ஆவது சரத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.
அவருடைய காலத்தில்தான் வடக்கின் ஆட்சியை புலிகளிடம் முழுமையாக கையளித்திருந்தார்.
வடக்கில் ஒர் ஆட்சியும் தெற்கில் ஓர் ஆட்சியும் நடைமுறையில் இருந்தது. தற்பொழுது ஜனாதிபதியின் கீழ் ஒரு நாடு ஓர் ஆட்சி சகலருக்கும் சமமான அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன.
தமிழர்கள் ஆதரவளிக்கும் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் வடக்கில் உள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்படுமாம் அத்துடன் ஒரு வாரத்துக்;குள் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவதாக கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஈழம் அமைத்து நாட்டை பிரிவினைவாத்துக்கு எத்தனிக்கமாட்டோம் என நீதிமன்றத்தின் ஊடாக சொல்லியிருந்தாலும் அவர்களது பெட்ரல் சுயாட்சி திட்டம் உள்ளது. இது இருதியில் பிரிவினைக்கே கொண்டு செல்லும்.
ஜே.வி.பியினர் அரச அதிகாரி ஜெனீவாவில் தூதுவர் ஆலயத்தை புரணமைக்கும் கடதாசிகளை தூக்கிக்கொண்டு தாக்கின்றனர்.
ஆனால், ஜரோப்பிய ஒன்;றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து இரத்துச் செய்தமை, சிவாஜிலிங்கத்தின் மேற்சொன்ன கதைகளுக்கு ஆகக் குறைந்தது ஓர் அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. அவர்களும் சர்வதேசத்தில் உள்ள விடுதலைப்புலிகளிளுடன் சேர்ந்துவிட்டனர்.
எமது கட்சி ஒருபோதும் தற்போதைய நிலைமையில் உள்ள ஜனாதிபதி முறைமை நீக்குதென்றால் இது தர்ணம் அல்ல மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இன்னும் 2 வருடங்கள் உள்ளன.
அதில் முழுநாட்டுக்கும் பூரணமானதொரு அரசியலமைப்பை மாற்றுவதற்கே எமது கட்சி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக உலகளாவிய ரீதியில் மலேசியாவிலும் ஜரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ருத்திரகுமாரன் செயற்படுகின்றார். இமானுவேல் மற்றும் ராயப்பு ஜோசப் ஆகியவர்கள் கொண்ட கிறிஸ்த்தவ பாரதியார்கள் கொண்ட அமைப்பும் உலகளாவியரீதியில் செயற்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வட-கிழக்கு அரசியல் மற்றும் தேர்தல்களின்போது எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுதவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்தமொன்றைச் கைச்ச்சாத்திட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றதே என்று ஊடவியலாளர் வினவியதற்கு அவர் பதிலளிக்கையில்,
கடந்த இரண்டு ஜனாபதித் தேர்தலிலும் தோல்விபெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் ஒன்று சேர்ந்து ஆதரவளித்தது.
அதன் பின் அந்த தவறை மீள செய்யமாட்டோம் என சொல்லித்தான் ஜனாதிபதி மஹிந்தவிடம் வந்து சேர்ந்து அமைச்சுகளையும் பொறுபேற்றனர்.
மீண்டும் இந்த வரலாற்றுத் தவறை இழைக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம்களை மீளவும் பலிக்காடாக்களாக்கி தோல்விபெறும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு உதவுவார். என்ற நிலைப்பாட்டுக்கு ரவூப் ஹக்கீமை போகமாட்டார் என நினைக்கின்றேன்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இவ்வாறு செய்வார்கள் என ஏற்கெனவே பல தடவைகள் அரசுக்கு சொல்லி வந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment