இதில் இரு ஓடைகளுக்கும் நடுவே தோட்ட வீடுகளில் வசித்து வந்த பழனிச்சாமி மற்றும் முருகாத்தாள் ஆகியோரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்பதற்காக கோவை அடுத்த சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. மீட்புப்பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். இந்நிலையில், 15 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாச்சலம் கூறுகையில், 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால் (32 செ.மீ., அளவுக்கு) ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக 15 பேர் சிக்கிக் கொண்டதாகவும்,
உடனடியாக இந்த தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது அறிவுறுத்தலின் பேரில், சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டதாகவும்,அனைவரும் விரைவாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment