மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சி குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணமுள்ளது.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 122 தொகுதிகளை வெற்றிகொண்டது
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க மேலும் 22 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
தேசியவாதக் காங்கிரஸ் பாஜகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தயார் என அறிவித்தபோதிலும், அது குறித்து இதுவரை எவ்விதமான பதிலையும் அக்கட்சி அறிவிக்கவில்லை
இந்நிலையில் தமது 25 வருட கூட்டணிக் கட்சியான சிவசேனாவுடன் ஆட்சியமைக்கவே, பாஜக ஆர்வமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
மகாராஷ்டிராவில் சிவசேனா 63 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டணிக் கட்சி தொடர்பிலான கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்கும் பட்சத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment