கண்டி - வில்லியம் கொப்பல்லாவ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (09) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வத்தேகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது பின்னால் வந்த பஸ் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதில் இருவரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment