வடக்கில் சீரற்ற காலநிலையால் 342 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்யும் பலத்த மழையினால் 342 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவர் காயமடைந்ததாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துவருவதால், பண்டிகைக்கான பொருட் கொள்வனவில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பொலன்னறுவையில் அதிகளவிலான 183 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

காலியில் 91.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பண்டாரவளையில் 79 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மொனராகலையில் 54 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மழை நீரைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் பயிற்சி பணிப்பாளர் ஆர்.எஸ் விஜேசேகர விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 9 மாதங்களாக வறட்சி நிலவியதால், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பதற்கு நீண்டகாலம் எடுக்குமென அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நேரத்தை வீணடிக்காது செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதியில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template