பனிப் பொழிவில் இறந்த மேலும் 10 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிப்புயல் மற்றும் பனிப் பொழிவுகளில் இறந்த மலேயேறிகளின் மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களில் ஒன்பது பேர் நேபாளிகள் ஒருவர் இஸ்ரேலியர். இவர்களின் உடல்கள், வடமேற்கு நேபாளத்தின் முஸ்டாங் நகரிலிருந்து தலைநகர் காட்மாண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதில் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்படாத ஏழு பேரும் அடங்குவர்.

நேபாளத்தில் மிகவும் பிரபலமான அன்னபூர்ணா சுற்றுவழிப்பாதை என்ற இந்த மலையேறும் பாதையில் இருந்து சுமார் 400 மலையேறிகளும் அவர்களது வழிகாட்டிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template