375 பேருடன் தப்பிய கருடா எயர்லைன்ஸ் விமானம்
கருடா இந்தோனேஷியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், 375 பயணிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(14) இரவு, கட்டாயமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஹஜ் யாத்திரிகர்களும் பயணித்துள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த விமானம் கட்டாயமாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானத்தை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் கூறினார்.
இதேவேளை, ஹஜ் பயணிகளை அழைத்து செல்வதற்காக மற்றுமொரு விமானத்தை கருடா விமான சேவை நிறுவனம் இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளதாக கூறியதாக, இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Labels:
Srilanka

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment