அவசர ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது அரசியல் யாப்பை மீறும் சட்டவிரோத செயல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி காலம் முடிவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது சட்டவிரோத செயல் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை இன்று (15) ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6 வருடங்கள் பதவி காலத்தில் நான்கு வருடம் முடிந்த பின் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது அரசியல் அமைப்பை அதன் சரத்துக்களை மீறும் செயலாகும். அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முயற்சிப்பது ஏன்? அது சட்டத்திற்கு உட்பட்டதாக அமையுமா? இவ்வாறான தேர்தலில் எதிர்காலம் என்ன? அதனை எப்படி தவிர்ப்பது? இந்த கேள்விகளுக்கு நாட்டு மக்கள் பதில் தேட வேண்டும்.

2010ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனாதிபதி 2016ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்கலாம். ஆனால் அவர் அவசர தேர்தல் ஒன்றுக்குச் செல்வது ஏன்? அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் அது பூதாகரமாக வெடிப்பதற்கு முன்னர் மேலும் 6 வருடங்கள் பதவியை நீடித்துக் கொள்ளவே இந்த அவசர தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அதிகாரம் இல்லாமல் போகும் என்ற பயத்தில் தேர்தல் நடத்த முயற்சிக்கின்றனர். நாட்டு மக்களின் கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து, சட்டத்தை மீறி, ஆளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை கணக்கிலெடுக்காது தேர்தல் நடத்த முன்வந்துள்ளமை ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியை மேலும் தக்கவைத்துக் கொள்ளவே. இது நாட்டு மக்களை எதிர்கால ஆபத்தில் தள்ளிவிடும்.

பணம் மற்றும் லஞ்சம் கொடுத்து எதிர்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தின் உதவியுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றனர். இது உண்மையான மக்கள் விருப்பம் அல்ல.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய போது அவர் இரண்டு தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால் மூன்றாவது தடவை போட்டியிடத் தகுதி அற்றவராகிறார். இலங்கையின் அரசியல் யாப்பில் இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this movie :

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template