புயல் எச்சரிக்கை: நாளை மறுநாள் 38 ரெயில்கள் ரத்து

அந்தமான் அருகே உருவாகியுள்ள புயலுக்கு ஹூட் ஹூட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புயல் விசாகப்பட்டினத்தின் தென் கிழக்கே 550 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


இந்த புயல், (நாளை மறுநாள்) அதாவது 12 ஆம் தேதி காலையிலேயே விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க உள்ளதாகவும், அப்போது அந்த பகுதியில் மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புவனேஷ்வர் - விசாகப்பட்டினம் மார்க்கத்தில் காலை 6 மணி முதல் செல்லும் 38 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.


ரத்தாகும் ரெயில்களின் விபரம் வருமாறு:-


பிரசாந்தி எக்ஸ்பிரஸ் - (புவனேஷ்வர்-பெங்களூர்)
இன்டர்சிட்டி - (புவனேஷ்வர்- விசாகப்பட்டினம்)
விசாகா எக்ஸ்பிரஸ் - (புவனேஷ்வர்- செகந்திராபாத்)
பூரி-ஒக்கா எக்ஸ்பிரஸ்
பூரி- திருப்பதி எக்ஸ்பிரஸ்
பூரி-சென்னை எக்ஸ்பிரஸ்
புவனேஷ்வர்- மும்பை கோனார் எக்ஸ்பிரஸ்
புவனேஷ்வர்- திருப்பதி எக்ஸ்பிரஸ்
புவனேஷ்வர்- யஷ்வந்த்பூர்


இதுதவிர, ஹவுராவில் இருந்து புறப்பட்டு தென் மாநிலங்களுக்கு வரும் சில ரெயில்கள் ராய்ப்பூர், நாக்பூர் வழியாக திருப்பி விடப்படுகிறது. புயலால் சேதமடையும் ரெயில் பாதைகளையும் சிக்னல்களையும் சரி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template