காணி அபிவிருத்தி அமைச்சின் பணிப்புரையின் பேரில் காணி ஆணையாளர் திணைக்களம் நில அளவைத் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
இன்று முற்பகல் மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில்,பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது- வட மாகாணச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களால் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான வைபவம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.
வட பகுதி மக்களுக்கு 20ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்களை ஒரே தடவையில் வழங்குவது இதுவை முதற்தடவையாகும்.காணி காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாண ஈளுநர் மற்றும் வட மாகாண காணித்திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலாளர்கள் ,பிரதேச செயலாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்வர்.
கடந்த 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய பலருக்கு இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. வட மாகாணத்தில் 694 நடமாடும் சேவைகள் ,கிழக்கு மாகாணத்தில் 372நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு, இந்த காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தகுதியானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
26,653 காணித்துண்டுகள் இனம் காணப்பட்டுள்ளன. இதிலிருந்தே காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளுக்கிணங்க வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமுல் நடத்தி வருகின்றது.
அதன் ஒரு கட்டமாகவே இந்த காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளன. தமிழ் ,சிங்களம் ,முஸ்லிம் என்ற பேதமின்றி நியாயமான முறையில் காணி உரித்துடையோருக்கு இந்த காணி உறுதிப்பத்திரங்களை வழங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்..

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment