யாழ்ப்பாணத்திற்கு தினமும் 4 ரயில்கள் சேவையிலீடுபடும்; கட்டண விபரமும் அறிவிப்பு -

யாழ்ப்பாணத்திற்கு தினமும் கொழும்பிலிருந்து நான்கு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் ரயில் கட்டண விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் யாழ்தேவி ரயில் சேவைகள் கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.


மேலும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கடுகதி மற்றும் இரவு நேரவு தபால் ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


இவை யாழ்ப்பாணத்திலிருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும். அத்துடன் கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் வரை செல்ல சாதாரண ரயில் கட்டணமாக  320 ரூபா அறவிடப்படவுள்ளது.


மேலும் முதல் வகுப்பு ஆசனங்களுக்கு  900 ரூபாவும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கு  800 ரூபாவும் அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குளிரூட்டப்பட்ட ரயில் சேவைக் கட்டணமாக  1500 ரூபா  அறவிடப்படவுள்ளது.


அதேபோல் எதிர்வரும் தினங்களில் மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பிரதி சனிக்கிழமைகளில் ரயில் சேவை இடம்பெறவுள்ளதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template