வவுனியாவில் 2 வயதுக் குழந்தையை கடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகரிலுள்ள அடகுக் கடையொன்றுக்கு அருகில் தாயுடன் இருந்த குழந்தையே, பெண்ணொருவரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழந்தையின் தந்தையது நண்பி எனத் தெரிவித்து, குறித்த பெண் குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், சந்தேகநபரான பெண், குழந்தையின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது கணவர் பெற்றுக்கொண்ட பணத்தை மீளக் கையளிக்கும் வரையில் குழந்தையை ஒப்படைக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment