6மாதக் குழந்தையை பஸ் நிலையத்தில் வீசிஎறிந்த தாய்

மதவாச்சி - கெதேவ - கோனகும்புக்வெவ பிரதேச பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாகக் கிடந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று (16) அதிகாலை குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.

6 மாதங்கள் வயது நிறைந்த குழந்தை மதவாச்சி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் பெற்றோர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template